Chicklet - Add to Google Homepage

Add to Google Reader or Homepage

Monday, November 14, 2011

வேண்டும் "மை" - வேண்டா "மை"

Another attempt for Tamil poetry. The concept i have used here is words ending with "மை" in Tamil. Inspired by so many "மை" in thirukkural i wanted to distinguish between வேண்டும் "மை" - வேண்டா "மை". There are some "மை" (வேண்டும் "மை") which is good for us and some "மை" (வேண்டா "மை") which is not good for us and hence the distinction. 

In the course i am making an effort to emphasize that some of the qualities are best when it occurs in pairs. For example பொருளுடன் அடக்கமுடைமை நன்றே

You may like this effort. :)

தன்மெய்யே உண்மையென்று மடமைப் போற்றும் மக்களே!
ஆண்மை மேன்மை, பெண்மை சிறுமை எனபிதற்றும் மக்களே
வலிமையேற்றி உயரெண்மிலா மென்மைத் தூற்றும் மக்களே
வெறுமை நீக்கி இனிமையேற்றிநல் வாழ்கை வாழ வாங்களே!

நல்வாழ்வும் பொல்வாழ்வும் "மை"யில் தானே இருக்குது
"மை" யையே மையமாக வாழும் வாழ்கை இனிக்குது !   
வேண்டும் "மை"  வேண்டா "மை"  எடுத்துரைக்க தோணுது
நல்வாழ்வின் உயர் நன்மை தொகுத்துரைக்க விழையிது !!

நன்மை பெருமை உண்மை செம்மை விளக்கவே விழைகிறேன்
பொய்மை கருமை விளங்கா ஆமை விளக்கவும் விரைகிறேன்!
வேண்டாமையும் விளங்காமையும்  தெளியாமையும் விலக்கியே
வேண்டும் "மை"யும்  வேண்டா "மை"யும் தெளிவாகவே விளக்குவேன் !!  

நீயென்றும் வேண்டா "மை"  வேண்டாமை நன்றே
இவையென்றும் இல்வாழ்வில் இல்லாமை நன்றே
கல்லாமை, கடுங்கயமை களைதல் நன்றே 
பொறாமைகொடுங்கோன்மை இளைத்தல் நன்றே 
வேண்டும் பொருள் இல்லாமை இல்லாமை நன்றே
உவந்தீய இயலாமை, நடுமையில் நில்லாமை
நல்லெண்ணம் இல்லாமைபிறந்மேன்மை விழையாமை  
இவையென்றும் இல்வாழ்வில் இல்லாமை நன்றே!

வேண்டும் "மை" வேண்டுமை மிக நன்றே!
அன்புடன் அறமுடைமை அணைத்தல் நன்றே
அறமுடன் அறிவுடைமை வளர்த்தல் நன்றே
அறிவுடன் அருளுடைமை சேர்ந்தல் நன்றே
அருளுடன் பொருளுடைமை இருந்தால் நன்றே,
பொருளுடன் அடக்கமுடைமை  கூடல் நன்றே 
அடக்கமுடன் அஞ்சாமை சேர்ந்தால் நன்றே
இல்லாமை இல்லாமை இருப்பதும் நன்றே 
கள்ளாமை,கொல்லாமை கொள்வதும் நன்றே
கள்ளுண்ணாமை, வெகுளாமை ஏற்பதும் நன்றே 
ஊக்கம் கூடி ஒழுக்கமுடைமை காப்பதும் நன்றே 
பேராண்மை, நற்பயனில் சொல்லாமை நன்றே    
பிழையாமை, பெரும்பழமை தூற்றாமை நன்றே
மைவிழியாள் நோக்கமதில் நாணுடைமை நன்றே 
மனை இல்லாள் ஆடையதில் கற்புடைமை நன்றே  
காளையவன் நெஞ்சுறத்தில் போரான்மை நன்றே    
திரு வேண்டும் தலைவனுக்கோ மடியின்மை நன்றே 
வேண்டும் "மைவேண்டுமை மிக நன்றே!!

"மை"யை நீக்கி "மை"யைக்கூட்டி வாழ்க்கையை வாழவே!   
பன்மை விலகி ஒருமை நோக்கி வாழ்கையும் போகுமே
வாய்மையும், செம்மையும், மனதிலே தூய்மையும்   
வாழ்விலே வளமையும், செழுமையும் விளையுமே!

நல்வாழ்வும் பொல்வாழ்வும் "மை"யில் தானே இருக்குது
"மையையே மையமாக வாழும் வாழ்கை இனிக்குது !   


Happy reading!
(happynhandsome@gmail.com)

No comments:

Post a Comment